திருப்பத்தூர் மாவட்டம் மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி குமார்(40). இவர் இன்று (செப்டம்பர் 16) தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்றார். திருப்பத்தூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி தூய்மைப் பணியாளர் பலி