திருப்பத்தூர்:கர்நாடகா மாநிலத்தில் தங்க புதையல் கிடைத்துள்ளதாகவும் அதை விற்று தரும்படி ஒருவர் செல்போனில் உரையாடும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சரவணன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். ஆம்பூர் தேவலாபுரம் ஊராட்சி எல்-மாங்குப்பதை சேர்ந்தவர்கள் குமார் மற்றும் சேகர் இருவரும் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்து உள்ளது அதில் பேசும் நபர் தான் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே கிராமத்தை சேர்ந்தவன் என்றும், எனது வீட்டின் அருகே இருக்கக்கூடிய முதியவர் ஒருவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது அந்த வீட்டின் பணிகள் மேற்கொள்ளும் போது அவருக்கு ஆறு கிலோ தங்க நாணயம் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள் புதையலாக கிடைத்துள்ளது.
இதனால் நீங்கள் பார்த்து எடுத்து சென்று விற்பனை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசியுள்ளார். தொடர்ந்து இது போன்ற செல்போன் அழைப்புகள் ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் உள்ள சிலருக்கு வந்துள்ளது.
உடனடியாக அந்த செல்போன் அழைப்பில் பேசும் நபர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருவோடுக்கு பதில் அலுமினிய தட்டு.. பாஜக போராட்டத்தில் ருசிகரம்!