திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் மூன்றாயிரத்து 490 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், சிகிச்சைப் பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 73 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாயிரத்து 202 பேர் சோதனை முடிவிற்காகக் காத்திருக்கின்றனர்.
மேலும் இரண்டாயிரத்து 947 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.