திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு வனப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 21 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவினை அமைச்சர்கள் கே சி வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் மரகக்ன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர்.
அப்போது அங்கிருந்த நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், பொதுமக்களுக்கு அமைச்சர்கள் மரக்கன்றுகளை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, “திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவான பிறகு வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையை விரிவுபடுத்துவதற்காக சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் அதனை ஈடுகொடுக்கும் வகையிலும் இயற்கை வளங்களை பாதுகாத்து வருங்கால சந்ததியினரை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுவதை பொதுமக்கள் ஆகிய நீங்கள் பாதுகாக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க...அமிர்தசரஸ் பொற்கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்: கரோனா நீங்க சிறப்பு பிரார்த்தனை!