திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 675 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஆயிரத்து 436 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 922 பேர் சிகிச்சைப் பெற்று பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 489 பேர் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலமாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வட்டாட்சியர், நகர கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் இதே போல் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இன்று நாட்றம்பள்ளி அடுத்த அஹ்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் இயங்கிவரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலுகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கபட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக எதிரில் உள்ள அலுவலகத்தில் பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்? - 'ஹார்பிக்' குடித்து பெண் அலுவலர் தற்கொலை!