ETV Bharat / state

குடிசை வீட்டில் தீ விபத்து: உணவின்றி குடும்பத்தினர் தவிப்பு!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானதால், கர்ப்பிணி உள்பட குடும்பத்தினர் தவித்துவருகின்றனர்.

author img

By

Published : Aug 23, 2020, 1:06 AM IST

fire
fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சைபுல்லா (24), சிமெண்ட் கடையில் பணிபுரியும் இவர் தனது தந்தையை இழந்து தாய் உள்பட மூன்று தங்கைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) ஆலங்காயம் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தங்கியிருந்தபோது, திடீரென அவரது குடிசை வீடு நள்ளிரவில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும் சைபுல்லாவிற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து அவர் குடும்பத்துடன் வந்து பார்த்தபோது குடிசை வீடு தீயில் மளமளவென எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்த போதிலும் வீட்டிலிருந்த இரண்டு சவரன் நகை, பணம், அரசு ஆவணங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமாயின.

வீட்டில் அனைத்தும் எரிந்து நாசமானதால் இரவு முழுவதும் தங்குவதற்கும் இடமில்லாமல் கர்ப்பிணியுடன் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் வெளியில் அமர்ந்து இருந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மின் கசிவு காரணமா? அல்லது அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தீ வைத்துவிட்டு தப்பியோடினரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் எரிந்து நாசமான ரூ. 6 லட்சம் பணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.