திருப்பத்தூர்: தைப்பூசத்தையொட்டி, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மைதானத்தில் இலவச வேட்டி, சேலை தருவதாகக்கூறிய நிலையில், கடந்த 4 ஆம் தேதி திடீரென 1000-க்கும் அதிகமான பொதுமக்கள் ஒரே இடத்தில் அங்கு டோக்கன் வாங்குவதற்காகக் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகமும் நடந்தேறியது. மேலும், இதனிடையே 10-க்கும் மேற்பட்டோர் மயங்கியும் விழுந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகமும் பதற்றமும் ஏற்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்திருந்த ஐயப்பனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரையில் 14 பெண்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே இது தொடர்பாக, வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் நகர காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் ஆகிய இருவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டு இன்று (பிப்.6) குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!