திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துத்திப்பட்டு சுடுகாட்டு பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், பதுக்கி வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சைபுல்லா என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
கயத்தாறு அருகே பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது!