உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொடிய தொற்று நோயான கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பல நாடுகளில் பொதுமக்கள் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இந்த கொடிய வைரஸை தடுக்க இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. குறிப்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை 15 நாட்கள் தனிமைப்படுத்த அந்த பகுதியைக் கண்காணிக்க காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு காவல் துறை கண்காணிப்பாளராக விஜயகுமார் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அதன் மூலம் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்து வருகிறார்.
அதாவது கூகுள் மேப் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்தி அவர்கள் எங்கே உள்ளார்கள் என்பதை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மருத்துவம் படித்த ஒரு சிறந்த மருத்துவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலை கிடைக்காமல் தவிக்கும் சாலையோரவாசிகள் - கண்டுகொள்ளுமா அரசு?