திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 5) முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாத வரி தண்டலர் வே.கம்சலா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் த.ஜெயபால், அலுவலக உதவியாளர் அனுமந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து ஆணையிட்டார்.
மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில், பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் அரசு பணியை துஷ்பிரயோகம் செய்தால் பணிகளை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஊர் கட்டுப்பாட்டை மீறிய உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்.. ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து!