திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட புதுப்பேட்டை சாலை நான்காவது தெருவைச் சேர்ந்தவர் வசந்த் (22). இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு, இவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வசந்த் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நகர காவல் துறையினர் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக வட்டச் செயலாளர் கொலை: இருவர் கைது