திருப்பத்தூர் மாவட்டம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 1ஆவது பகுதியில் வசித்து வருபவர் தமிழ் வேந்தன்(65). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சற்குணம். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சற்குணத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்திருந்தனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தமிழ்வேந்தன் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை