திருப்பத்தூர் மாவட்டம், ஜோலர்பேட்டை அருகேயுள்ள சந்திரபுரம் ஊராட்சி செம்மேடு வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வனப்பகுதியில் தீ வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனால், அப்பகுதி முழுவதும் தீ மளமளவென வேகமாகப் பரவிவருவகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "காட்டில் உள்ள வனவிலங்குகள், மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி எரிந்துகொண்டுள்ளன. அப்பகுதியில் காற்று அதிகமாக வீசுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு எளிதாக தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து வரும் புகையை பொதுமக்கள் சுவாசிப்பதால் மூச்சு திணறல் எற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் உடனடியாக தீயை அணைத்து தீ வைத்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும்.
இந்த வனப்பகுதிக்கு வரும் சில நபர்கள் தீ வைத்து செல்வது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆகையால் இதற்கு தீர்வு காண வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து