கரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்பூர் இந்து துவக்கப் பள்ளியில் நகராட்சி நிர்வாகம், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட வணிகர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடக்கி வைத்தார்.மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கபசூர குடிநீர் வழங்கினர்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன், வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.