திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (செப்.23) புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,505ஆக உயர்ந்துள்ளது.
அம்மாவட்டத்தில் இதுவரை 3,792 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 83 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 78,448 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டு 2,445 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 3,417 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : மதுரையில் இன்று 79 பேருக்கு கரோனா உறுதி