திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியிலுள்ள அல்லாமா இக்பால் கலையரங்கத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் இளம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் பங்கேற்று, இளம் வாக்காளர்களான மாணவர்களிடம் வாக்களிப்பது ஜனநாயக கடமை என வலியுறுத்தி பேசினார். பின் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை, வாக்கு இயந்திரத்தின் மூலம் மாணர்களுக்கு விளக்கப்பட்டது.
ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், தவறாது வாக்களிப்போம், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பொறுப்பு முதல்வர் லியாகத் அலி, வாணியம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி!