ஆம்பூரை அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் பேருந்தில் பயணக் களைப்பில் அயர்ந்து தூங்கியபோது, அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சல் போட்டு மற்றவர்களின் உதவியைக் கோரியுள்ளனர். இதனைக் கண்ட கல்லூரி மாணவர்கள், பயணிகள் அந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்: கே.எஸ். அழகிரி