ETV Bharat / state

இந்தியா மீது உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளது.. ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி

இந்தியா மீது உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளது, அதை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
author img

By

Published : Aug 18, 2022, 6:04 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவுக்கான துணை தூதர் மற்றும் அமெரிக்காவின் அறிவியல் இயக்கமான NSF இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஆளுநர் பேசுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட ஆண்டுகளாக நட்பு நாடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்தியா அமெரிக்காவுடனான உறவு ஜனநாயகத்துமானதாக உள்ளது. இந்திய ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்தது. இலக்கியத்திலும், ஏட்டிலும் இந்திய ஜனநாயகம் உறுதிப்படுத்துகிறது. அமெரிக்க இந்திய இடையிலான உறவு ஆண்டுக்காண்டு மேம்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா நூறாவது சுதந்திர தினத்தை கடக்க உள்ள போது இன்றைய இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அது உங்களுடைய பொறுப்பும் கூட. இதற்கு முன்பு வரை அரசாங்கத்தின் வளர்ச்சி ஆக இருந்தது தற்போது மக்களுக்கான வளர்ச்சியாக இந்தியா மாறி வருகிறது. இதற்குக் காரணம் உங்களைப்போன்ற இளைஞர்களே. இதற்கு முன் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தது. ஆனால் தற்போது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது இதற்கும் படித்த இளைஞர்களே காரணம்.

இதற்கு முன்பு இல்லாத அளவில் தற்போது 100க்கும் மேற்பட்ட விண்வெளி தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் கூட செயற்கைகோளை செய்து வருகிறார்கள். சுமார் 750 பள்ளி மாணவர்கள் சேர்ந்து 75 செயற்கைக்கோள்களை செய்து இருக்கிறார்கள் இது எதிர்பார்க்காத ஒன்று.

உங்களுடைய வயதுக்கு நீங்கள் வானத்தையே எல்லையாக வைத்து புதிய புதிய சிந்தனைகளை சிந்தித்து செயல்படுத்த முனைய வேண்டும். உலக நாடுகள் நம் நாடு மீது பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் 150 மேற்பட்ட நாடுகளுக்கு நாம் கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று எரிசக்திகளை உறுவாக்கி வருகிறோம். 2025 இல் 100 ஜிகாவாட் இல்லைக்கை தற்போதே அடைந்துள்ளோம். 2030ல் 500 ஜிகாவாட்டை அடைய இலக்கு நீர்ணயித்துள்ளோம். அதையும் விரைவில் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்து உள்ளோம். அதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் காரணம். உலக நாடுகளுக்கு நம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் அதை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது என பேசினார். அதேபோல் வாழ்கையில் நிரந்தர வெற்றி தோல்வி கிடையாது. தோல்விகளை கடந்து செல்ல வேண்டும். தோல்விகள் நம்மை தோற்க்கடிக்காதவாரு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என பேசினார்.

இதையும் படிங்க: தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.