ETV Bharat / state

பெண் மீது ரசாயனம் தெளித்து ரூ. 60 ஆயிரம் திருட்டு! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: பட்டப் பகலில் பெண்ணின் மீது ரசாயனம் தெளித்து ரூ. 60 ஆயிரம் திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

the-man-sprayed-chemical-on-the-woman-and-stole-the-money

author img

By

Published : Oct 21, 2020, 6:52 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீ.டி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு கடன் செலுத்துவதற்காக திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பல்லவன் வங்கிக்கு ரூ. 60 ஆயிரம் கொண்டுச் சென்றார். அப்போது ராஜேஸ்வரியின் பின்புறதோள்பட்டையின் மீது அடையாளம் தெரியாத நபர், ரசாயனம் தெளித்தாகக் கூறப்படுகிறது.

அப்போது, தோல் பட்டையில் ஏதோ அரிப்பு ஏற்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரி, தனது இருசக்கர வாகனத்தில் பணம் இருக்கும் பையை வைத்துவிட்டு கை கழுவ சென்றார். இதனிடையே அடையாளம் தெரியாத ஒருவர், இருசக்கர வாகனத்திலிருந்த பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பெண்ணின் மீது இரசாயனத்தை தெளித்து பணம் திருட்டு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, இதுகுறித்து கந்திலி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.