திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் மலையாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கல் குவாரி ஒன்று செயல்பட்டுவந்தது. ஆனால், இந்தக் குவாரியில் அடிக்கடி வெடி வைத்து பாறைகளை உடைத்து வந்தனர்.
இதனால் அருகிலுள்ள பண்டிதர் வட்டம், ஏரி வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதப்படைகின்றன. மேலும் இப்பகுதியில் சரியான சாலை வசதியில்லாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தட்டுத்தடுமாறி குவாரியை கடப்பதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும் இது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு கல் குவாரி இப்பகுதியில் செயல்படக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு செயல்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சின்னப்பள்ளி குப்பதைச் சேர்ந்த திமுக பிரமுகர் காசிநாதன் என்பவர் இந்தக் கல் குவாரியை ஏலம் எடுத்து மீண்டும் இயக்க நேற்று பூஜை செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மர்ம காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு: கொரோனா பீதியில் பொதுமக்கள்!