திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 42 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்ர். செய்வதறியாது திகைத்த சிறுமி மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பத்தூரில் பாலியல் சீண்டல் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண் உள்ளது என்கிற விழிப்புணர்வை சமீப நாட்களாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிடோர் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இதனை அறிந்த சிறுமி தந்தையின் பாலியல் சீண்டல் குறித்த தகவலை சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்கிற எண்ணை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானோர் சிறுமியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண்ணுக்கான விழிப்புணர்வின் மூலம் சிறுமி தைரியமாக புகார் தெரிவித்த சம்பவம் அரசு அலுவலர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது