திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு 14 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,944 பேருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது பேசுகையில், “தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 100 புதிய கல்லூரிகளை உருவாக்கி கல்வியில் மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அதிமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
இந்த முயற்சியால் தேசிய அளவில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது உயர் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்று எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு திட்டத்தினை நிறைவேற்றி உள்ளார்.
இதனடிப்படையில் இந்த ஆண்டு 327 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர் எனச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை : கோயிலுக்கு சீல் வைத்த வருவாய் துறையினர் !