ETV Bharat / state

வேலூரில் தற்காலிக சந்தை: காய்கறி வியாபாரிகள் கண்டனம் - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: நேதாஜி சந்தையில் கடைகள் திறக்க ஆட்சியர் அனுமதிக்க வேண்டும் எனக் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.

தற்காலிக மார்க்கெட்டுக்கு காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு

author img

By

Published : Jun 2, 2020, 3:41 PM IST

ஊரடங்கு காரணமாக வேலூர் நேதாஜி காய்கறிச்சந்தை மூடப்பட்டதையடுத்து, வேலூர் புதிய பேருந்து நிலையம், வேலூர் முஸ்லீம் பள்ளி மைதானம், ஆகிய இடங்களில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டுவந்தது.

தற்போது சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடப்பதாலும், பேருந்து இயக்கம் தொடங்கியதாலும், 65 கடைகளுடன் செயல்பட்டுவந்த தற்காலிக காய்கறிச்சந்தை, வேலூர் பழைய மீன் சந்தை இருந்த இடத்தில் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

வேலூரில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தை
மேலும் பழைய மீன் சந்தை இடத்தில் பழக்கடை சந்தை இருப்பதால், காய்கறி வியாபாரிகளுக்கு இடம் தர முடியாது எனப் பழக்கடை வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இதனால் அங்கு தற்காலிகமாக காய்கறிச்சந்தை போட முடியாத சூழல் உள்ளது. இது குறித்து நேதாஜி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த அனைத்து உத்தரவுக்கும் நாங்கள் இதுவரை முழு ஒத்துழைப்பு அளித்துவந்தோம். ஆனால் தற்போது, புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த தற்காலிக சந்தை, வேலூர் பழைய மீன் சந்தை இருந்த இடத்திற்கு மாற்றப்பட்டது.
எனவே நாங்கள் அங்கு இன்று கடை வைக்கச் சென்றபோது அங்குள்ள பழக்கடை வியாபாரிகள் கடை வைக்க அனுமதிக்காமல் தடைசெய்கின்றனர். மேலும் அதனை மீறி அங்கு கடை வைத்தால் பிரச்னை எழும் என்ற அச்சம் உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் முன்பு இருந்தது போலவே நேரக்கட்டுப்பாட்டின்படி நேதாஜி சந்தையில் சில்லறை காய்கறிக் கடைகள் இடைவெளியுடன் செயல்பட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.