ETV Bharat / state

பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்... பொதுமக்கள் தர்மஅடி! - child abuse

பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

sexual harassment
sexual harassment
author img

By

Published : Jun 28, 2022, 8:18 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர், விஜயன். இந்தப் பள்ளியில் தற்பொழுது 9 மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம், ஆசிரியர் விஜயன் கல்வி கற்றுக்கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை உணர்ந்து கொண்ட சிறுமி, வீட்டிற்குச் சென்று தன்னுடைய பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குச் சென்று ஆசிரியர் விஜயனை சரமாரியாகத் தாக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார கல்வி அலுவலர் மாதேஷ், ஆசிரியர் விஜயன் மீது துறை சார்ந்த நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று உத்தரவாதம் அளித்தார். எனவே, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் ஆசிரியர் விஜயன் இதேபோன்ற செயலில் ஈடுபட்டு துறை சார்ந்த அலுவலர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின், காவல் துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: Viral Video - குடிபோதையில் பெண் தகராறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.