திருப்பத்தூர்: வாணியம்பாடி நூருல்லாபேட்டையை சேர்ந்தவர் பாத்திமா பேகம், இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், சொந்த வீடு கூட இல்லாத பாத்திமாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூரில் உள்ள வரி ஏய்ப்பு அலுவலகத்திலிருந்து 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸ் வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் பாத்திமா பேகத்தின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சென்றுள்ளனர். தனது மகளிற்கு திருமணம் செய்ய வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ள தங்க நகைகளை மீட்க சென்ற போது பாத்திமா பேகம் பெயரில் அவரது ஆதார் மற்றும் பான்கார்டுகளை பயன்படுத்தி ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரேடர்ஸ் மூலம் 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை முதலில் அடைத்து விட்டு அடமானம் வைத்த தங்க மீட்டு செல்லுமாறு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் செய்வதறியது திகைத்த பாத்திமாக பேகம் தனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டினை பயன்படுத்தி சிலர் 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.