ETV Bharat / state

திருப்பத்தூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா - Tamil Rule Language Law Week Festival

திருப்பத்தூரில் இன்று தொடங்கிய தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பங்கேற்றார்.

Tamil Rule Language Law Week Festival in Tirupattur

author img

By

Published : Dec 23, 2020, 5:45 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் அரங்கில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா தொடங்கியது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பங்கேற்று பேசினார். அதில், "தமிழ் மொழிக்காக நமது மாவட்டத்தில் அதிக அளவு தொண்டாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் அதிக தமிழ் சான்றோர்கள் வாழ்ந்த மண்ணாக திகழ்கின்றது. உதாரணமாக மு. வரதராசனார் திருப்பத்தூர் பகுதியினைச் சேர்ந்தவர். இவரது தமிழ் பணி அளப்பரியது. மேலும் உலகளாவிய பல்வேறு நூல்களை இயற்றி வெளி உலகிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

உலகப் பொது மறையாக திகழும் திருக்குறள் மனித வாழ்க்கையை சுட்டிக்காட்டும் மிகப்பெரிய புனித நூலாக காணப்படுகிறது. இது தமிழ் மொழியின் பெருமை” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ச்செம்மல் விருதாளர் இரத்தின நடராசன், தமிழ்ச்செம்மல் இஸ்லாமிய கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவராஜ் பரிதி, புத்தக பதிப்பாளர் இளம்பரிதி, சமூக ஆர்வலர் அசோகன், ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி ஆசிரியை தெய்வ சுமதி மற்றும் தமிழ் மூத்த அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’விமான நிலையங்களில் இனி தமிழில் அறிவிப்புகள்’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.