ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தல்: திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு - சட்டப்பேரவைத் தேர்தல்

திருப்பத்தூர்: மாவட்ட வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார்.

வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

author img

By

Published : Oct 22, 2020, 4:03 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள், தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களிடம் கருத்துகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவனருள்,

"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவாமலிருக்க, பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி, ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகளைத் தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 49 வாக்குச்சாவடி மையங்கள் மாறுதல் செய்யப்படுகின்றன.

எனவே வாக்குச்சாவடி மையங்கள் மாறுதலில் ஆட்சேபனை இருந்த அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட ஏழு தினங்களுக்குள் துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்" எனக் கூறினார்.

பின்னர் இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 30 வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.