நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மூகநீதி பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, ரவை போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மேலும் இவர்கள் நியூ டவுன், ஜீவா நகர், நேதாஜி நகர், பஷிராபாத், கோனா மேடு, லாலா ஏரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கரோனா குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’