திருப்பத்தூர்: உலகம் முழுவதும் உள்ள 188 நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதன்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தகுதிச்சுற்று செஸ் போட்டி, இன்று (ஜூலை 16) மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கட்டடத்தில், பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இங்கு குறைந்த அளவு செஸ் போட்டிக்கான ஏற்பாடுகள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு இருந்ததால், பள்ளி மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து செஸ் விளையாடும் நிலை ஏற்பட்டது.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செஸ் நகரமாக மாறும் சென்னை மாநகரம் - கோலாகலம் அடையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி!