திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றியம், பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
அந்தப் பள்ளியில் மொத்தம் ஒன்பது ஆசிரியர் தேவைப்படும் நிலையில், தற்போது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். அதிலும், ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
190 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள்
எனவே, இரண்டு ஆசிரியர்களால் 190 மாணவர்களுக்குப் போதிய கல்வி போதிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அப்பள்ளியில் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவன செய்ய வேண்டும் என ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா ஸ்ரீ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இம்மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை