ETV Bharat / state

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஆறு பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

author img

By

Published : Oct 18, 2022, 10:37 PM IST

திருப்பத்தூரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த ஆறு பெண்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

ஆறு பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஆறு பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருப்பத்தூர்: கேத்தாண்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த ஆறு பெண்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னூர் பகுதியில் கோபிநாதன் என்பவர் வசிக்கிறார். இவர் கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மானிய விலையில் இயற்கை உரங்களை வாங்கி தனது நிலத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு போட்டுள்ளார். இதற்குப் பின்பு மண்ணை கொட்டும் வேலைக்காக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒரு ஆண், 22 பெண்கள் உட்பட 23 பேர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேத்தாண்டப்பட்டி ஐயாக்குட்டி வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி விஜயலட்சுமி, குமார் மனைவி சாலம்மாள், வீரராகவன் மனைவி கவிதா, சுரேஷ் மனைவி அனு, கணேசன் மனைவி நவநீதம் மற்றும் ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் மனைவி சத்தியா ஆகியோர் உரத்தின் வீரியம் தாங்க முடியாமல் மூச்சு திணறி வேலை செய்யும் இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.

பின்பு அங்கிருந்தவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை மாவட்ட இணை இயக்குநர் மாரிமுத்து விரைந்தார். அங்கு அனைவரிடமும் நலம் விசாரித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஆறு பெண்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் - கேரள அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.