திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த குளிதிகை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் சில ஆண்டுகளாக குத்தகை முறையில் தாபா நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் தாபாவிற்கு வந்த 6 பேர் ஊழியரிடம் ரொட்டி மற்றும் சன்னா மசாலா ஆர்டர் செய்துள்ளனர். உணவு வர சிறிது தாமதம் ஆகும் என ஊழியர் கூறியதால், குடிபோதையில் அவர்கள் மேசை, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர். உணவு பொருட்களை தூக்கி எறிந்து ரகளை செய்த அவர்கள் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
மேலும் சிசிடிவி கேமிராவை உடைத்து உள்ளனர். இதுகுறித்து முகமது யூனிஸ் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் ஆம்பூர் காலல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணிடம் செயின் பறிப்பு: கம்பத்தில் கட்டிவைத்து திருடனுக்கு அடி