திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல் நிலையங்களில் புகார் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி வாணியம்பாடியில் பல்வேறு இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது வாணியம்பாடி பேருந்து நிலையம் எல்ஐசி நிறுவனம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒருவரை மடக்கி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்ததால் காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பதும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மிளகாய்ப் பொடி தூவி கணவனை அடித்த மனைவி : பரிதாபமாக உயிரிழந்த கணவன்