ETV Bharat / state

கள்ளச் சாராயம் காய்ச்ச கொண்டு செல்லப்பட்ட 70 மூட்டை வெல்லம் பறிமுதல்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட 70 மூட்டை வெல்லம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச் சாராயம் காய்ச்ச கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ வெல்லம் பறிமுதல்

author img

By

Published : May 22, 2021, 7:02 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு ஆந்திர எல்லைப்பகுதியான மாத கடப்பா மலைப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச வெல்லம், மூலப்பொருட்கள் கொண்டு செல்வதாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ், உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் மாதகடப்பா மலைப்பகுதியில் நள்ளிரவு முதல் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தச்சொன்னபோது டிராக்டரை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், டிராக்டரின் பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

சந்தேகமடைந்து டிராக்டரை காவல்துறையினர் சோதனை செய்தபோது, கள்ளச்சாராயம் காய்ச்ச கொண்டுசெல்லப்பட்ட 70 மூட்டை வெல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 70 வெல்ல மூட்டைகளையும், நான்கு இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய ஆந்திர மாநிலம் ரமகுப்பம் நரியாலாப் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் வெங்கடேஷ், அதே பகுதியைச் சேர்ந்த கள்ளச்சாராயம் காய்ச்சும் பிரகாசம் உள்ளிட்ட 6 பேரை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்

இதையும் படிங்க: தடையை மீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல்: அதிரடி காட்டிய வருவாய் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.