திருப்பத்தூர்: ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “நாங்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்து அரசியலுக்கு வரவில்லை. பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள்.
மக்களுக்காக போராடியதற்கு என் மீது 128 வழக்கு உள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட வழக்குதான் அதிகம். சீருடை அணியாத மக்கள் ராணுவம், நாம் தமிழர் கட்சியினர். இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியல், விளம்பர அரசியல்தான் உள்ளது. மக்களுக்கான அரசியல் என்பது கிடையாது.
8 வயது குழந்தையை 22 நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர். அவரது தந்தை தனது பிள்ளையை எல்லா இடத்திலும் தேடினேன், ஆனால் கோயிலில் மட்டும் தேடவில்லை, அது புனிதமான இடம், அங்கு இது போன்ற இழிவான செயலை செய்வார்களா என்ற நம்பிக்கையில் அங்கு மட்டும் தேடமால் விட்டுவிட்டேன் என பதிவிட்டது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
குழந்தையை கொலை செய்தவர்களை கைது செய்தபோதும் அவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என்றுதான் சொன்னார்கள். பாரத மாதா மட்டும் உண்மையில் நேரில் நின்றால், பல பேர் சேர்ந்து கற்பழித்துக் கொன்று இருப்பார்கள். ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற பலவற்றை ஒன்றாகக் கொண்டு வருகின்றனர். ஆனால் தண்ணீர் மட்டும் ஒரு சொட்டு கிடையாது. அமைதியான முறையில் தண்ணீரைப் பெறுவோம் என கூறுவது எல்லாம் தேர்தல் அரசியல்.
எல்லாம் குடும்பத் தலைவிக்கும் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து விட்டு, தகுதி பார்த்து கொடுத்தார்கள். நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலை குறைந்துள்ளது. இது மக்களுக்கான அரசியல் கிடையாது, தேர்தல் அரசியல்.
இஸ்லாமியர் சிறை கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ரவிக்கு கடிதம் அனுப்புகிறார்கள். அவர் அதில் கையொழுத்து போடமாட்டார் என தெரிந்தும், இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது திமுக” என பேசினார்.
இதையும் படிங்க: படுக்கைக்கு அடியில் ரூ.42 கோடி..! 5 மாநில தேர்தலுக்காக பதுக்கல் என குற்றச்சாட்டு!