ETV Bharat / state

'ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?' - ஆம்பூரில் சீமான் காட்டம்

author img

By

Published : Mar 12, 2021, 6:44 AM IST

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு எந்தத் தகுதியும் உள்ளதா? என ஆம்பூரில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.

ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது, ஆம்பூரில் சீமான் காட்டம், Seeman campaign in Ambur Constituency, திமுக தலைவர் ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டச்செய்திகள், திருப்பத்தூர், ஆம்பூர், Tirupattur latest, Tirupattur, Ambur, நாம் தமிழர் கட்சி, Naam Thamizhar Katchi, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், Seeman
seeman-campaign-in-ambur-constituency

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை பகுதியில் ஆம்பூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெகருன் நிஷா, வாணியம்பாடி வேட்பாளர் தேவேந்திரன் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்த வேனில் நின்றபடி நேற்று (மார்ச் 11) பொதுமக்களிடையே வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சீமான், 'மனிதர்களாகிய நாம் தாகம் ஏற்பட்டால் தண்ணீரை கடையில் வாங்கிக் குடிக்கிறோம். காக்கை, குருவிகள், ஆடுமாடுகள், விலங்குகள், பறவைகள் எப்படி குடிக்கும். இயற்கை வளங்களை சுரண்டி மற்ற உயிரினங்களுக்கு நாம் கேடு விளைவித்துக் கொண்டு இருக்கிறோம். இயற்கை அனைவருக்கும் பொதுவானது, அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

ஆம்பூரில் சீமான் பரப்புரை

பசி, பஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை ,கொலை கொள்ளையற்ற, ஊழலற்ற, ஆட்சியை உருவாக்க நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்த தலைவரின் வாரிசு இல்லை. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து மக்களில் ஒருவனாக நின்று கொண்டு இருப்பவர்கள்.

கருணாநிதி கட்சி, ஆட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் முக ஸ்டாலின் கையில் கொடுத்துவிட்டு சென்றார். கருணாநிதியின் மகன் என்பதை தவிர்த்து ஸ்டாலினுக்கு வேறு என்ன தகுதி உள்ளது. ஒரே மேடையில் இந்தப்பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின், அந்தப்பக்கம் ஐயா எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடுவில் நான் என விவாதிக்க தயாரா?.

இவர்களை போல மக்கள் எதிரில் நடிப்பவன் நான் இல்லை. 50 வருடம் நடித்து ரசிகர்களை சந்தித்து வந்தவன் இல்லை. மக்களை சந்தித்து மக்களோடு ஒருவனாய் வந்தவன் கருத்தியல் பழகி மக்களுக்காக இனதின் விடுதலைக்காக அரசியலுக்கு வந்தவன் நான். ஆகையால்தான் சமரசம் இன்றி 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்கள் களமிறக்கி உள்ளோம்.

அரசியல் அறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் இங்கு உள்ளீர்கள். ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் மெகருன் நிஷா, வாணியம்பாடியில் போட்டியிடும் தேவேந்திரன் ஆகியோரின் வெற்றி நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டும் இல்லை உலகெங்கிலும் வாழும் 13 கோடி தமிழ் மக்களின் வெற்றியாகும்.

ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள் தவறாமல் அனைவரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்களியுங்கள். எனக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் ஒரே முயற்சி தேர்தல் மட்டுமே. ஆகவே மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் என்று பேசி திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: "சோதனை மேல் சோதனை": சீமான் 'அப்செட்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.