டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஷகீல் அகமது தலைமை வகித்தார். இப்போராட்டத்தின் போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து காவல்துறை துணைக் கண்கானிப்பாளர் சச்சுதானந்தம் தலைமையிலான காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், பேருந்து நிலையத்தில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!