ETV Bharat / state

கட்சி மாறியதால் தகராறு - ராணுவ வீரரை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே திமுகவினர் அதிமுகவில் இணைந்ததால் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக பிரமுகர்கள் 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Army man attack
Army man attack
author img

By

Published : Jan 22, 2023, 8:23 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு பகுதியில், கடந்த 20ஆம் தேதி திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரது தலைமையில் அப்பகுதியைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், காவேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த மாலா சேகர், அவருடைய சகோதரியான ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக செயலாளரும், கவுன்சிலருமான உமா கண்ணுரங்கம் உட்பட ஐந்து பேர் ஆனந்தன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர்.

வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆனந்தனுடைய மகனான ராணுவ வீரர் சிலம்பரசன் சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிலம்பரசனுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மாலா சேகர், உமா கண்ணுரங்கம், கருணாநிதி, வினோத் குமார் விக்ரம், விக்னேஷ், சுந்தரம் உள்ளிட்ட ஏழு பேர் மீது புகார் அளித்தனர்.

இதையும் படிங்க:11 வயது சிறுவன் சிறுத்தை தாக்கி பலி.. தொடரும் அவலத்தால் மக்கள் மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.