ETV Bharat / state

மணல் கொள்ளையில் ஈடுபட்ட வண்டிகள் பறிமுதல்: வருவாய் அலுவலர்கள் நடவடிக்கை - வாணியம்பாடி பாலாற்றை சுற்றியுள்ள இடங்களில் சிலர் மணல் கொள்ளை

திருப்பத்தூர்: வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மினி லாரி, மூன்று மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

loot of sand in Tirupattur
sand theft vehicle seized
author img

By

Published : Mar 17, 2020, 7:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றைச் சுற்றியுள்ள இடங்களில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக வாணியம்பாடி வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது பாலாற்றிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினிலாரியை வருவாய்த் துறையினர் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான உடைந்த பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். இதில் ஓட்டுநர் லாரியிலிருந்து தப்பிச்சென்றதால் வருவாய்த் துறையினர் லாரியைப் பறிமுதல்செய்தனர்.

மணல் கொள்ளையில் ஈடுபட்ட வண்டிகளை வருவாய்த் துறை அலுவலர்கள் பறிமுதல்

பின்னர் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் மணல் ஏற்ற தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாட்டு வண்டிகளையும் பறிமுதல்செய்த வருவாய்த் துறையினர் வாணியம்பாடி நகர கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.