திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தோளப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஞானசேகரன் (75). இவரது மனைவி வசந்தம்மாள். இருவரும் நேற்று (டிச. 02) பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
பாலூர் அருகே சென்றபோது அவரது மனைவி இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லி எதிரில் இருந்த கடைக்குச் சென்று காய்கறி வாங்கியுள்ளார். அப்போது ஞானசேகரனும் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப்பையை எடுக்காமல் சென்றுள்ளார்.
பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர், கடைக்குச் சென்று திரும்பிய தம்பதி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பை காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் காவல் துறையினர் வங்கி, திருட்டுச் சம்பவ நடந்த பகுதி ஆகிய இடங்களிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து திருட்டுக் கும்பலைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்புத்திரை திரைப்படத்திற்காக பிரத்யேக பைக்கை உருவாக்கிய பைக் திருட்டு கும்பல்!