திருப்பத்தூர் மாவட்டம், காவலூர் சோதனைச் சாவடியில் காவல் துணை ஆய்வாளர் பழனிச்செல்வம் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து, திருப்பத்தூர் நோக்கி இயக்கி செல்லப்பட்ட வாகனம் ஒன்றைத் தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஏழாயிரம் கிராம் தங்க நகைகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, உடனடியாக நகையை பறிமுதல் செய்த காவலர்கள், அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி சுப்பிரமணியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமானவரித் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நகைகள் சரிபார்க்கப்பட்டு வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பரப்புரையில் குஷ்பு சுட்ட தோசை முதல் பத்திரத்தோடு வந்த கமல் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்