திருப்பத்தூர் மாவட்டம் வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் ராமசாமி (70). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கோத்தான குப்பம் பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தை பார்வையிட சென்றார்.
பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புவதற்காக திருப்பத்தூர் வேலன் நகர் அருகே ராமசாமி வரும்போது கண்டெய்னர் லாரி மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
உடனே சாலையில் சென்றவர்கள் கண்டெய்னர் லாரி ஓட்டுநரை பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜிலேபி கடைக்குள் புகுந்த கார்!