திருப்பத்தூர்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில் வாணியம்பாடி கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து பாலாறு நோக்கி செல்லும் 3,800 மீட்டர் நீள ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அதனை அகற்றும் பணி நேற்று (டிச. 18) நடைபெற்றது.
வாணியம்பாடி வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து