தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், தேர்தல் பறக்கும் படை வீரர்கள் பரபரப்புடன் தங்கள் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
சினிமா பாணியில் செயல்பட்ட பறக்கும் படை ஹீரோக்கள்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், பறக்கும் படை தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது பிக் அப் வாகனத்தில் சுமார் 3 டன் ரேசன் அரிசியை மர்ம நபர்கள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அதையறிந்த அலுவலர்கள் அந்த வாகனத்தை பிடிக்க முயன்றுள்ளனர்.
அலுவலர்கள் வருவதைக் கண்டு திருட்டு கும்பல் பிக் அப் வாகனத்தில் பறந்துள்ளனர். அரிசி கடத்தல் கும்பலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![3 டன் ரேசன் அரிசி பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-05-ration-rice-seized-vis-scr-pic-tn10018_05032021175922_0503f_1614947362_963.jpg)
![3 டன் ரேசன் அரிசி பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-05-ration-rice-seized-vis-scr-pic-tn10018_05032021175922_0503f_1614947362_117.jpg)
இதையும் படிங்க:பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.3 லட்சம்