திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் ரேஷன் அரசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும்படை தனி வட்டாட்சியர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 31 ரேஷன் அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1,578 கிலோ கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்