திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு கடத்துவதற்காக சாலை ஓரம் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில், வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே 18 மூட்டைகளில் சுமார் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவற்றை நேதாஜி நகரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்!