ETV Bharat / state

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக தனியார் நிறுவனம் மோசடி - பொதுமக்கள் முற்றுகை - பண மோசடி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தனியார் சிறுசேமிப்பு நிர்வாகம் ரூ.5 கோடி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனியை முற்றுகையிட்டனர்.

money cheating
பணம் மோசடியில் ஈடுபட்டவர்கள்
author img

By

Published : Mar 9, 2021, 12:43 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் சின்னகுளம் மாரியம்மன் கோயில் பகுதியில் கிரீன் பிஎல்பிஎல் என்ற தனியார் சிறுசேமிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சீரங்கபட்டி பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மகன் நடராஜன்(42), பாபு ஆகியோர் சில வருடத்துக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார கிராமத்திலுள்ள பொதுமக்களிடம் கமிஷன் மூலம் ஏஜெண்டை உருவாக்கி 500 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாய் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் பணத் தொகையை கட்டி வந்ததால், ஐந்து வருடம் கழித்து பணத்தை இரட்டிப்பாக கொடுப்பதாக கூறி இவர்கள் பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.

தங்களுடைய பணம் இரட்டிப்பாகும் என்கிற நம்பிக்கையில் பொதுமக்கள் பலர் இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி வந்தனர். தற்போது 5 வருடமாகியும், சுமார் 5 கோடி ரூபாய் வரையிலான பணம், தவணையாக கட்டியவர்களுக்கு திருப்பி தராவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு நடராஜன், பாபு ஆகியோர் மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

money cheating
பண மோசடி செய்ததாக கூறி பொதுமக்கள் முற்றுகை

அப்போது நடராஜன், பணம் கட்டிய சிலருக்கு அவரவர் பணத்துக்கு ஏற்ற தொகையில் காசோலையை கொடுத்திருக்கிறார். அந்தக் காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் வங்கி அலுவலர்களிடம் கொடுத்தபோது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் அவ்வளவு தொகை இல்லை எனத் திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர்கள் பல முறை நடராஜனிடம் சென்று தங்களுடைய பணத்தை கேட்டு முறையிட்டுள்ளனர். பின்னர் திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள நடராஜனுக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனியை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி, பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், காவல்துறையினர் அங்கிருந்த பாபுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

பண மோசடி செய்ததாக கூறி முற்றுகையிட்ட பொதுமக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும், பணத்தை தருவதாக ஏமாற்றி தலைமறைவாகியுள்ள நடராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: உதவி கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த காவல் உதவி ஆய்வாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.