திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 33,675 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 1,436 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 922 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 489 பேர் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தொற்று அதிகமாக பரவி வருவதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தினமும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஆகஸ்டு 7) வாணியம்பாடியில் தொற்று பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 19 வார்டுகள் உள்பட 36 வார்டுகளிலும் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.