திருப்பத்தூர்: பொங்கல் திருநாளில் தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான உணவுப் பொருள்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு முதல் புத்தாண்டில் விளைகின்ற பொது அரிசியை புது பானையில் பொங்களிட களிமண்ணால் ஆன புது பானையும், புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து இலவசமாக தந்தால் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெருகும் நிலை உருவாகும். எனவே பொங்கல் தயாரிக்க தேவையான பொருள்களை அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.
அதனுடன் மண்பாண்டத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என கூறி மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) நலவாரிய சங்க நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை மனுவுடன் மண் பானையையும் சேர்த்து வழங்கினர்.
பின்னர் மாவட்டச் ஆட்சியர் அமர்குஷ்வாஹா மண்பானையையும், மனுவையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்குவதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:National Health Missionல் பணி வாய்ப்பு