திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் சார் ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்கள், நாற்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினர் தங்கள் தபால் ஓட்டுகளை செலுத்தினர்.
தற்போது திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில், சார் ஆட்சியர் (தேர்தல் அலுவலர்) வந்தனா கார்க் முன்னிலையில் இன்று (மார்ச்.30) திருப்பத்தூர் சரக காவல் நிலையங்களின் காவல் துறையினர் சுமார் 158 பேர் தபால் வாக்கினை செலுத்தினர்.
இந்தத் தபால் வாக்குப்பதிவின்போது, திருப்பத்தூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, பிற காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மோடி வருகைக்கு எதிர்ப்பு - முகிலன் கைது